நாடு
குறள் # 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச் செல்வரும் சேர்வது நாடு
குறள் # 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு
குறள் # 733
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு
குறள் # 734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு
குறள் # 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு
குறள் # 736
கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடுஎன்ப நாட்டின் தலை
குறள் # 737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
குறள் # 738
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து
குறள் # 739
நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல நாட வளம்தரு நாடு
குறள் # 740
ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே வேந்துஅமை வில்லாத நாடு

