Kural

திருக்குறள் #749
குறள்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்
குறள் விளக்கம்
போர் தொடங்கியபோதே பகைவர்களை அழிக்கும் விதத்தில் பல்வகைப் போர்த் திறமைகளால் உயர்வினைப் பெற்ற உள்ளிருந்து போர் செய்வோர்களையும் மேலும் வேண்டிய பெருமைகளையும் பெற்றிருப்பது அரணாகும்.