குறள்
முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப்
பற்றியார் வெல்வது அரண்
குறள் விளக்கம்
முற்றுகையிடுவதில் வல்லவர்களான பகைவர்கள், பெருஞ்சேனையுடன் வந்து முற்றுகையிட்ட போதிலும், தன்னைச் சார்ந்த படையினர் குறைவாக இருந்தாலும், தாம் நின்ற இடத்திலேயே நின்று, போர்செய்து வெற்றி பெறுமாறு அமைவதே அரணாகும்.