குறள்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள்; அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்
குறள் விளக்கம்
அறிவு, ஆண்மை, பெருமை என மூவகை ஆற்றலும் பெற்றுப் போர் புரிபவர்களுக்கு அரணானது சிறந்ததாகும் அவ்வாற்றலில்லாத்தால், தம்முடன் போரிட வருபவர்களுக்குப் பயந்து தன்னையே புகலிடமாக அடைந்தவர்களுக்கும் அரண் சிறந்ததாகும்.