Kural

திருக்குறள் #747
குறள்
முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்
குறள் விளக்கம்
வெளிவர இயலாதவாறு நெருங்கிச் சூழ்ந்து முற்றுகையிட்டாலும், அவ்வாறு முற்றுகையிடாமல், வாய்த்த இடத்தை நோக்கி ஒருமுகமாகப் போர் செய்தாலும், வஞ்சனையினால் குறுக்கு வழியினாலும் பகைவர்களால் கைப்பற்ற இயலாதவாறு அமைந்திருப்பதே அரணாகும்.