Kural

திருக்குறள் #740
குறள்
ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமை வில்லாத நாடு
குறள் விளக்கம்
நல்ல அரசனோடு நல்லாட்சியும் அமையாத நாடானது இதற்கு முன்பு சொல்லப்பட்ட நற்பண்புகள் எல்லாம் நிறைவாக அடைந்திருந்தாலும் அவற்றினால் எவ்விதப் பயனும் இல்லை. அனைத்தும் அமைந்தாலும் நல்லரசனும் நல்லாட்சியும் அமையாதது நாடல்ல.