Kural

திருக்குறள் #739
குறள்
நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல
நாட வளம்தரு நாடு
குறள் விளக்கம்
தம்நாட்டு மக்கள் செல்வங்களைத் தேடித் துன்புறாமல் அவர்களிடம் தானாகவே வந்துசேர்கின்ற செல்வத்தையுடைய நாடுதான் நாடென்று அறிஞர்கள் சொல்லுவார்கள். ஆகவே செல்வங்களைத் தேடித் துன்புறுவதால் வந்து சேரும் வளங்கள் நிறைந்த நாடுகள் நாடுகள் ஆகமாட்டா.