குறள்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
குறள் விளக்கம்
ஊற்றுநீர், மழைநீர் என்ற இருவகை நீர்வளமும் வளம்தரும் வாய்ப்புகளுடன் கூடிய மலையும் அம்மலையிலிருந்து ஆறாக வரும் நீர்வளமும் அழிக்க இயலாத வலிமை பொருந்திய அரண்களும் ஒரு நாட்டிற்கு இன்றியமையாத உறுப்புகளாகும். நல்ல நீர்வளமும், மலைவளமும், வலிவுடைய அரணும் நாட்டின் அவயவமாம்.