குறள்

அவை அஞ்சாமை
குறள் # 721
வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்
குறள் # 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்
குறள் # 723
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சா தவர்
குறள் # 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்
குறள் # 725
ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு
குறள் # 726
வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு
குறள் # 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்
குறள் # 728
பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்
குறள் # 729
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லார் அவைஅஞ்சு வார்
குறள் # 730
உளர்எனின் இல்லாரொடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்