குறள்
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து
குறள் விளக்கம்
நோயில்லாத மக்களும் செல்வம் நிறைந்ததும் நல்ல விளைச்சலுடன் கூடியதும் இன்பம் நிறைந்த வாழ்வும் அனைத்துப் பாதுகாப்புகளுடன் அமைந்ததும் ஆகிய இவ்வைந்தும் ஒரு நாட்டிற்கு அழகு தரும் அணிகலன்களாகும் என்று அறிஞர்கள் கூறுவார்கள். நல் விளைச்சல், இன்பம், செல்வம், காவல். பிணியின்மை நாட்டிற்கு அழகு தருபவை.