Kural

திருக்குறள் #734
குறள்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு
குறள் விளக்கம்
அதிகமான பசியும் நீக்க இயலாத பெரு நோய்களும் வெளியிலிருந்து வந்து அழிவைத் தரும் பகையும் இல்லாமல் இனிது நடப்பதே நலம் நிறைந்த நாடாகும்.