சொல்வன்மை
குறள் # 641
நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று
குறள் # 642
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு
குறள் # 643
கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
குறள் # 644
திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனின்ஊஉங்கு இல்
குறள் # 645
சொல்லுக சொல்லிப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து
குறள் # 646
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசுஅற்றார் கோள்
குறள் # 647
சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
குறள் # 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்
குறள் # 649
பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற சிலசொல்லல் தேற்றா தவர்
குறள் # 650
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது உணர விரித்துஉரையா தார்

