குறள்

அமைச்சு
குறள் # 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு
குறள் # 632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு
குறள் # 633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு
குறள் # 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
குறள் # 635
அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை
குறள் # 636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை
குறள் # 637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
குறள் # 638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்
குறள் # 639
பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி கூறும்
குறள் # 640
முறைப்படச் சூழ்ந்தும் முடிஇலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்