குறள்
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசுஅற்றார் கோள்
குறள் விளக்கம்
தாம் சொல்வதை மீண்டும் கேட்க மற்றவர்கள் விரும்பும்முறையிலே சொல்லி மற்றவர்கள் தமக்குச் சொல்லும்போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கேட்பதுதான் தகுதி நிறைந்த குற்றமில்லாத அமைச்சனின் கொள்கையாகும்.