Kural

திருக்குறள் #633
குறள்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு
குறள் விளக்கம்
பகைவருடன் போர் மூண்டால் அப்பகைவர்க்குத் துணையாயிருப்பவரைப் பிரித்தலும், தன்னுடன் சேர்ந்திருப்பவரைப் பிரியாமற் கொடையினாலும் இன்சொல்லினாலும் பாதுகாத்துக் கொள்ளுதலும், பிரிந்துபோன நல்ல உறவுகளை தேவையிருப்பின் மீண்டும் சேர்த்தலும் ஆகிய செயல்களைத் திறம்படச் செய்பவனே அமைச்சர் பொறுப்புக்குத் தகுதியானவன்.