குறள்
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்
குறள் விளக்கம்
ஓர் அரசன், நூலறிவு நுண்ணறிவு ஆகிய இரண்டையும் அறிந்து சொல்பவரது அறிவையும் அழித்து, ஏற்றுக் கொள்ளாமல் அந்த அறிவைத் தானும் அறியாதவனாக இருந்தாலும் அவ்வரசனுக்கு நல்ல ஆலோசனைகளை உறுதியாகச் சொல்ல வேண்டியது அமைச்சராக இருப்பவருக்கு கடமையாகும்.