குறள்
அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை
குறள் விளக்கம்
சட்டங்களை நன்கு அறிந்திருப்பதோடு தனது சுயசிந்தனையையும் நன்கு இணைத்து சொல்லும் வல்லமையையும் எப்பொழுதும் அதனைச் செயல்படுத்தும் திறமையையும் நன்கு அறிந்தவனை மட்டுமே தனக்கு ஆலோசனை கூறுவதற்கு அரசன் துணையாக வைத்துக்கொள்வான்.