Kural

திருக்குறள் #632
குறள்
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு
குறள் விளக்கம்
சட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் உறுதி; நாட்டு மக்களை அன்புடன் பாதுகாத்தல்; நீதி நூல்களை இடைவிடாது ஆராய்ந்துணர்தல்; தளரா முயற்சி ஆகிய ஐந்தோடும் தன்னைப் பொருத்தி சிறப்புப் பெற்றவனே அமைச்சனாகத் தகுதியுடையவனாவான்.