குறள்
பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை
குறள் விளக்கம்
ஒருவன் அனைத்து அறிவையும் பெற்றிருந்தாலும் கைப்பொருளை இழப்பதற்குக் காரணமான ஊழானது (முன்செய்த தீவினைப்பயன்) வந்துவிட்டால் (வெளிப்பட்டுவிட்டால்) அவ்வறிவினை அறியாமையாக்கும். (ஒருவனுக்கு அறிவு குறைவாக இருந்தாலும்) (கைப்பொருள்) ஆகி வருவதற்குக் காரணமாகிய ஊழானது (முன்செய்த நல்வினைப்பயன் வெளிப்படும்பொழுது) அகலச்செய்யும் (அவ்வறிவை வளர்க்கும்).