Kural

திருக்குறள் #373
குறள்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்
குறள் விளக்கம்
நுட்பமான பொருட்களை உணர்த்துகின்ற பல நூல்களைக் கற்றிருந்தாலும் அதற்கும் மேலாகச் செயல்படும்பொழுது தனது ஊழிற்கேற்ற அறிவே முன்நிற்கும்.