மானம்
குறள் # 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்
குறள் # 962
சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்
குறள் # 963
பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு
குறள் # 964
தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை
குறள் # 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்
குறள் # 966
புகழ்இன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்; என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை?
குறள் # 967
ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று
குறள் # 968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து?
குறள் # 969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்
குறள் # 970
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு

