அவைஅறிதல்
குறள் # 711
அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர்
குறள் # 712
இடைதெரிந்து நன்குஉணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர்
குறள் # 713
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல்
குறள் # 714
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்
குறள் # 715
நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு
குறள் # 716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு
குறள் # 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து
குறள் # 718
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று
குறள் # 719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நங்கு செலச்சொல்லு வார்
குறள் # 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்

