குறள்
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்
குறள் விளக்கம்
அறிவில் சிறந்தவர்கள் முன்னிலையில், தாமும் அறிவில் சிறந்தவர் என்பதை வெளிக்காட்ட வேண்டும். அவ்வறிவில்லாத வெள்ளை மனமுடையவர்கள் முன்னால், தாமும் வெண்மையான சுண்ணாம்பு நிறத்தை உடைய மனமுடையவராக இருக்க வேண்டும்.