Kural

திருக்குறள் #713
குறள்
அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்
குறள் விளக்கம்
அவையின் தன்மையை அறிந்து கொள்ளாமல், ஒரு விஷயத்தைச் சொல்லும் செயலைத் தானாகவே முன்வந்து செய்துகொண்டிருப்பவர், சொல்லுகின்ற முறையை அறியாதவரேயாவார். அவர் அனைத்துக் கலைகளையும் நன்கு கற்றிருந்தாலும் ஒன்றுமே தெரியாதவராகவே கருதப்படுவார்.