குறள்
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று
குறள் விளக்கம்
ஒன்றின்பொருளை மற்றவர்களிடமிருந்து பெறாமல் தானே அறிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறனை பெற்றிருப்பவர்களின் சபையினில் நன்கு கற்றுணர்ந்த ஒருவர், ஒரு விஷயத்தைச் சொல்லுவது என்பது தானே வளர்ந்து நிற்கின்ற பயிரைச் சுற்றியுள்ள பாத்தியுனுள் நீரை நிரப்புவது போன்றதாகும்.