குறள்

பொச்சாவாமை
குறள் # 531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு
குறள் # 532
பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
குறள் # 533
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு
குறள் # 534
அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு
குறள் # 535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்
குறள் # 536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்
குறள் # 537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்
குறள் # 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்
குறள் # 539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
குறள் # 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்