Kural

திருக்குறள் #538
குறள்
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்
குறள் விளக்கம்
தலைவனுக்கு இப்பண்புகள் கட்டாயம் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் உயர்வாகக் கூறியருளியவற்றை நன்கு பின்பற்றி செயல்புரிய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்பண்புகளைக் கடைப்பிடிக்க மறந்தவர்களுக்கு வருகின்ற அடுத்த பிறவிகளில் நன்மையும் அதனால் வரும் இன்பமும் இல்லை.