அறிவுடைமை
குறள் # 421
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்
குறள் # 422
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு
குறள் # 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
குறள் # 424
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு
குறள் # 425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு
குறள் # 426
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு
குறள் # 427
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர்
குறள் # 428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்
குறள் # 429
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்
குறள் # 430
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்

