குறள்
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
குறள் விளக்கம்
எது இல்லையாயினும் அறிவை உடையவர் அனைத்தையும் உடையவராகவே அறிஞர்களால் கருதப்படுவர். அறிவை உடையவராக இல்லையெனில் அறிஞரல்லாதவர் நோக்கில் அனைத்தையும் உடையவராக இருந்தாலும் அறிஞர்களால் எதுவும் இல்லாதவராகவே கருதப்படுவர்.