Kural

திருக்குறள் #424
குறள்
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு
குறள் விளக்கம்
அருமையான பொருளாயினும் எளிய பொருள் என கேட்பவர் மனதில் விளங்கும்படி சொல்லி, தான் பிறர் சொல்லுகின்ற தெளிவற்ற சொற்களின் உள்ளார்ந்த பொருளை ஆராய்ந்து புரிந்துகொள்வது அறிவு ஆகும்.
குறள் விளக்கம் - ஒலி