அவா அறுத்தல்
குறள் # 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து
குறள் # 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது வேண்டாமை வேண்ட வரும்
குறள் # 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை; யாண்டும் அஃதுஒப்பது இல்
குறள் # 364
தூஉய்மை என்பது அவாவின்மை; மற்றுஅது வாஅய்மை வேண்ட வரும்
குறள் # 365
அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார் அற்றாக அற்றது இலர்
குறள் # 366
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா
குறள் # 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும்
குறள் # 368
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும்
குறள் # 369
இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்
குறள் # 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்

