குறள்
இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
குறள் விளக்கம்
துன்பங்களுக்கெல்லாம் காரணமான. பெருந்துன்பமான ஆசை என்பதானது உள்ளத்திலிருந்து அறவே அழிந்துவிட்டால், உடம்போடு இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் போதும், பேரின்பமானது இடைவிடாது நிலைத்திருக்கும்.