Kural

திருக்குறள் #364
குறள்
தூஉய்மை என்பது அவாவின்மை; மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும்
குறள் விளக்கம்
மாசற்ற முக்தி நிலை யாதெனில் ஆசையின்மை உள்ளத்தில் நிலைத்திருப்பதாகும். அவ்வாசையின்மையானது மெய்ப்பொருளை இடைவிடாது விரும்பி தியானம் செய்வதால் உண்டாகும் பயனாக அமையும்.