Kural

திருக்குறள் #368
குறள்
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
குறள் விளக்கம்
ஆசை இல்லாதவர்க்கு யாதொரு துன்பமும் இல்லை என்றறிக! ஆசை மட்டும் இருக்குமாயின் அதனாலேயே துன்பங்கள் தொடர்ந்து மேலும் மேலும் இடைவிடாது வந்துகொண்டே இருக்கும்.