குறள்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்
குறள் விளக்கம்
மெய்யுணர்ந்தவன் விருப்பப்படுவதானால், பிறவாத தன்மையை அதாவது உயிராகிய தான் மீண்டும் உடலில் புகாமலிருத்தலை விரும்பட்டும். ஏனெனில் அந்தப் பிறவாத தன்மை புலனின்ப ஆசையின்மையை விரும்பினால் கிடைக்கும்.