Kural

திருக்குறள் #831
குறள்
பேதமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்
குறள் விளக்கம்
பேதமை என்று சொல்லப்படுவது, ஒருவனுக்குப் பிற குற்றங்கள் எல்லாவற்றிலும் மிக்கதாகிய ஒன்று, யாது என்று கேட்டால் அதுதான் வறுமை, பழி, பாபங்கள் போன்ற தனக்குக் கேடு தருவனவற்றைக் கைக்கொண்டு, செல்வம், புகழ், அறங்கள் போன்ற நலம் தருவனவற்றைக் கைவிடுதலாகும்.
குறள் விளக்கம் - ஒலி