Kural

திருக்குறள் #834
குறள்
ஓதிஉணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும் தான்அடங்காப்
பேதையில் பேதையார் இல்
குறள் விளக்கம்
மனம், மொழி, மெய்கள் அடங்குவதற்குக் காரணமாகிய நூல்களை ஓதியும், அவ்வடக்கத்தால் வரும் பயனை அறிந்தும், அவற்றைப் பிறருக்கு எடுத்துக் கூறியும் தான் அடங்கி ஒழுகாத அறிவிலையைப் போன்ற அறிவிலி உலகத்தில் இல்லை.
குறள் விளக்கம் - ஒலி