Kural

திருக்குறள் #830
குறள்
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்
குறள் விளக்கம்
பகைவர் நண்பராகும் காலம் வரும்பொழுது, முகத்தால் மட்டும் நட்பினை வெளிப்படுத்தி, அகத்தில் நட்பினை வளர்க்காமல் நீக்கிவிடவேண்டும்.