Kural

திருக்குறள் #825
குறள்
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
குறள் விளக்கம்
உள்ளத்தில் நேர்மையான உள்ளன்புடன் தம்மோடு பழகாதவரை ஒருபொழுதும் அவர் கூறும் சொற்களை நம்பி ஏமாந்து, நண்பராக ஏற்றுக்கொள்ளுதல் முறையல்ல.