படைச்செருக்கு
குறள் # 771
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ முன்நின்று கல்நின் றவர்
குறள் # 772
கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
குறள் # 773
பேராண்மை என்ப தறுகண்;ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு
குறள் # 774
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்
குறள் # 775
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
குறள் # 776
விழிப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து
குறள் # 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து
குறள் # 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர்
குறள் # 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர் ?
குறள் # 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து

