Kural

திருக்குறள் #773
குறள்
பேராண்மை என்ப தறுகண்;ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு
குறள் விளக்கம்
பகைவர்மேல் இரக்கமமில்லாமல் போர் செய்யும் வீரத்தைச் சிறந்த ஆண்மை என்று யுத்த தர்மமறிந்தோர் அறப்போரின் தன்மையை அறிந்தவர்கள் சொல்வார்கள் அப்பகைவருக்குப் போர்புரியும் போது ஒரு தாழ்வு ஏற்படுமாயின் அதனைப் பார்த்து இரக்கமின்றிப் போர்புரிவதை நீக்கி அருள் உள்ளத்துடன் உதவி செய்வது அந்த பெரிய ஆண்மையென்னும் படைக்கு உறுதியான நேர்மையாகும் என்று சொல்லுவார்கள்.