குறள்
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர்! பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்
குறள் விளக்கம்
பகைவர்களே! என்னுடைய தலைவனை எதிர்த்துப் போர்புரிய நின்று, அவனால் தாக்கப்பட்டு இறந்து, அதன்பின் இப்போது கல்லுருவாகி நின்றவர்கள் பலராவார்கள். ஆகையால் நீங்கள் கல்லுருவாகாமல் உங்கள் உடம்புடன் இருக்க விரும்பினால் என்னுடைய தலைவனை எதிர்த்துப் போர் செய்ய எண்ணி அவர் எதிரே நிற்காமல் செல்வீர்களாக.