Kural

திருக்குறள் #775
குறள்
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
குறள் விளக்கம்
பகைவர் மேல் சினம் கொண்டு பார்த்த கண்கள் பகைவர் அவரது வேலைக் கொண்டு தன்மீது எறியும் போது அதைப் பொறுக்க இயலாமல் அச்சினம் கொண்ட பார்வையை நீக்கி அக்கண்கள் இமைக்குமானால் ஆண்மை நிறைத்த வீரர்களுக்கு அவ்வாறு இமைப்பதே தோற்று ஓடுவதற்கு ஒப்பாகுமல்லவா?