Kural

திருக்குறள் #778
குறள்
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்
குறள் விளக்கம்
போரில் துன்பம் தரும் இடையூறு நேர்ந்த போதிலும் தன்னுடைய உயிர் போவதின் பொருட்டு அச்சமின்றித் துணிந்து போர் புரியும் வீரர்கள் தனது அரசன் அந்த நிலையில் போரிட வேண்டமென்று சினம் கொண்டு தடுத்தாலும் அவ்வீரத்தின் ஆற்றல் சிறிதும் குறையும் தன்மை இல்லாதவர் ஆவார்கள்.