Kural

திருக்குறள் #699
குறள்
கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர்
குறள் விளக்கம்
நிலையான தெளிந்த அறிவினையுடையவர்கள் தாம் மன்னரால் நன்கு மதிக்கப்பட்டோமென்று மனதில் நினைத்துக் கொண்டு மன்னர் விரும்பாத செயல்களைச் செய்யமாட்டார்கள்.