குறள்
போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
குறள் விளக்கம்
அரசரைச் சார்ந்தவர்கள் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் பெரிய தவறுகள் தம்மிடம் நடந்துவிடாமல் காத்துக்கொள்ள வேண்டும். அத்தவறுகள் நடந்ததாக அரசன் சந்தேகப்பட்டால் அதற்குப்பிறகு அவ்வரசரிடம் அச்சந்தேகத்தை நீக்குவது என்பது எவருக்கும் இயலாது.