Kural

திருக்குறள் #694
குறள்
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
குறள் விளக்கம்
வல்லமை பொருந்திய அரசர் அருகில் இருக்கும் போது அவர் காணும்படி மற்றவரிடம் காதோடு காதாகப் பேசுவதையும் இனியொருவரைப் பார்த்துச் சிரிப்பதையும் தவிர்த்து நடந்து கொள்ளவேண்டும்.