Kural

திருக்குறள் #661
குறள்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
குறள் விளக்கம்
ஒரு செயலின் வலிமை என்று சொல்லப்படுவது அச்செயலைச் செய்யும் ஒருவன் அச்செயலை செய்து முடித்தேயாக வேண்டும் என்று எண்ணம் எண்ணத்தின் வலிமையேயாகும். அதைத் தவிர மற்ற வலிமை எல்லாம் வலிமை என்று சொல்ல இயலாது.