குறள்
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்
குறள் விளக்கம்
வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்து அறிந்தவராது தீர்ந்த உறுதியான கருத்துயாதெனில், இடையூறு வரக்கூடிய செயல்களைச் செய்யாமல் தவிர்ப்பதும் செய்து கொண்டிருக்கும் செயலில் ஊழ் வினையின் காரணமாக இடையூறு ஏற்படினும் அதை மனந்தளராமல் செய்வதும் ஆகிய இவ்விரண்டினது வழி (வெளிப்பாடு) என்று பகருவர்.