Kural

திருக்குறள் #447
குறள்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?
குறள் விளக்கம்
ஒருவன் தவறு செய்யும் பொழுது அவனை நெருங்கி, வெகுண்டு, அறிவுரை கூறும் பெரியவர்களைத் துணையாகக் கொண்டவரை, இத்தகைய பெரியவர்கள் நமக்கு மிகத்தேவையானவர்கள் எனக்கருதி அரசாள்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கிறார்கள்? ஒருவருமில்லை என்பது கருத்து.